இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்

  • February 3, 2023 / 07:02 PM IST

தெலுங்கு திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார்.

அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1965-ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமானார் கே.விஸ்வநாத் . தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மறைவுக்கு இந்திய சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ” இயக்குநர் விஸ்வநாத் வாழ்க்கையின் மாற்றத்தையும் கலையின் அழியாத தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர் . எனவே அவரது கலை அவரது வாழ்நாளுக்கு அப்பால் கொண்டாடப்படும் என்று பதிவிட்டுள்ளார் மேலும் அவரது கலை வாழ்க என்ற பதிவிட்டு ஒரு தீவிர ரசிகர் கமல் என்று கையொப்பமிட்டுள்ளார் .

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus