நேதாஜி சிலையின் கீழ் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்… கமல் வெளியிட்ட புகைப்படம்!

  • December 16, 2022 / 10:15 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘இந்தியன் 2’ படத்தில் மிக முக்கிய ரோல்களில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கமல் ஹாசன் ட்விட்டரில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு ஸ்டில்லை ஷேர் செய்ததுடன் “25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே ‘இந்தியன் – 2’ படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus