மணிரத்னம் இயக்கத்தில் கமல் – சிம்பு இணைந்து நடிக்கும் ‘KH234’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • May 15, 2023 / 09:20 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் மணிரத்னம் இயக்கும் படம் கமலின் கேரியரில் 234-வது படமாம். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவிருப்பதாகவும், மிக முக்கிய ரோலில் சிலம்பரசன் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ரெட் ஜெயன்ட் மூவிஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் 2-ஆம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus