கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • August 31, 2023 / 08:08 PM IST

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் ‘அயலான்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் 21-வது படமாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ படம் மூலம் ஃபேமஸான சாய் பல்லவி நடிக்கிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

இதனை ‘சோனி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் ஷூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

தற்போது, காஷ்மீர் ஷெட்யூல் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus