ஷங்கரின் ‘இந்தியன் 2’-க்கான டப்பிங் பணியை துவங்கிய கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

  • October 10, 2023 / 11:14 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘இந்தியன் 2’ படத்தில் மிக முக்கிய ரோல்களில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus