விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது.
தற்போது, நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் ட்விட்டரில் “ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும்.
உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டபோது எடுக்கப்பட்ட ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள். pic.twitter.com/SmZEUr4qqT
— Kamal Haasan (@ikamalhaasan) March 2, 2021
[VIDEO] @ikamalhaasan sir receives his first #COVID19Vaccine shot, inspiring more to get vaccinated as soon as possible. 🙂🔦#Nammavar #Ulaganayagan #COVID19 #Coronavirus pic.twitter.com/g4b3GY27jK
— Diehard Kamalians (@DiehardKamalian) March 2, 2021