அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

  • March 24, 2023 / 05:43 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி (வயது 85) இன்று (மார்ச் 24-ஆம் தேதி) அதிகாலை இயற்கை எய்தினார்.

தற்போது, நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தம்பி அஜித்குமார் அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus