தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் கிரேஸி மோகன். இவர் டாப் ஹீரோவான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் பல படங்களுக்கு வசனம் எழுதியும் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்திருக்கிறார்.
இதில் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் K சம்பந்தம், வசூல் ராஜா MBBS’ ஆகிய படங்களில் கிரேஸி மோகனின் காமெடி வசனங்கள் அதிக கவனம் ஈர்த்தது.
2019-ஆம் ஆண்டு கிரேஸி மோகன் காலமானார். தற்போது, இவரின் மனைவி நளினி இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. நளினியின் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.