தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.
சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவ குழுவினர் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். நேற்று, எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் “நேற்றை விட இன்று அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் சிகிச்சையால் அவரது உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. அப்பா சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி” என்று பேசியிருந்தார்.
தற்போது, இது தொடர்பாக பிரபல நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1294928249626083329