இசைஞானியின் புதிய ஸ்டுடியோவிற்கு சென்ற ‘உலக நாயகன்’… தீயாய் பரவும் வீடியோ!

  • September 20, 2021 / 07:10 PM IST

தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. இந்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவை துவங்கினார். ஸ்டுடியோ துவங்கிய முதல் நாளில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை தொடங்கினார் இளையராஜா.

இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், பவானிஸ்ரீயும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

தற்போது, இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நேரில் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. கமல் நடிக்கும் புதிய படமான ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus