கமல் – மாதவன் இணைந்து நடித்த ‘அன்பே சிவம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • January 24, 2023 / 04:28 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கமல் ஹாசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அன்பே சிவம்’. இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக மாதவன் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இதனை இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் கிரண், நாசர், சந்தானபாரதி, மதன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.12.45 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus