கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ்’ சீசன் 7… வெளியானது ப்ரோமோ ஷூட் அப்டேட்!

  • July 6, 2023 / 05:01 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு (2023) ஜனவரி 22-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா மகாலக்ஷ்மி, ராம் ராமசாமி, ADK, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், குயின்ஸி, நிவாஷினி, தனலக்ஷ்மி, மைனா நந்தினி ஆகிய 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீசனில் அஸீம் டைட்டில் வின்னர் என்றும், விக்ரமன் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 7-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 7-ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஜூலை 5-ஆம் தேதி) இதற்காக சென்னையில் எடுக்கப்பட்ட ப்ரோமோ ஷூட்டிங்கில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus