கமல் இயக்கி, நடித்த படம் ‘ஹேராம்’… இதன் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • January 21, 2023 / 07:56 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கமல் ஹாசன் நடித்து, இயக்கி 2000-ல் ரிலீஸான படம் ‘ஹேராம்’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, நாசர், அப்பாஸ், வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தை கமல் ஹாசனே தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.12 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus