செம ஸ்டைலிஷ் லுக்கில் கமல் ஹாசனின் போட்டோஷூட்… குவியும் லைக்ஸ்!

  • October 30, 2020 / 12:09 PM IST

திரையுலகில் ஒரு கலைஞன் தான் செய்ய நினைத்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தான் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். கமல் ஹாசன் திரையுலகில் சாதித்த விஷயங்களின் லிஸ்ட் மிகப் பெரியது.

1960-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படமான ‘களத்தூர் கண்ணம்மா’-வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல் ஹாசன். அடுத்தடுத்து ஐந்து படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். அதன் பிறகு கமல் எடுத்த அவதாரங்கள் பல, படத்துக்கு படம் தன் நடிப்பால் புதிய முயற்சிகளை செய்து அப்ளாஸ் வாங்கினார். பல புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கே சேரும்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். தற்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று திரைப்படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கமல் ஹாசனின் புதிய போட்டோஷூட் ஸ்டில் வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இந்த போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

https://twitter.com/KHFollowers/status/1322028457505611776

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus