மீண்டும் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் இயக்குநர் மணிரத்னம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • November 7, 2022 / 12:10 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ இந்த ஆண்டு (2022) ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள்.

மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், கமல் நடிக்கும் புதிய படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ரெட் ஜெயன்ட் மூவிஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகுமாம். ஏற்கனவே, கமல் – மணிரத்னம் கூட்டணியில் வெளியான ‘நாயகன்’ படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus