கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘சிகப்பு ரோஜாக்கள்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • October 19, 2022 / 09:05 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ இந்த ஆண்டு (2022) ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள்.

மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 3’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கமல் ஹாசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா இயக்கியிருந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படத்தின் மொத்த வசூல் ரூ.30 லட்சமாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus