அடேங்கப்பா… கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • August 29, 2022 / 06:11 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ இந்த ஆண்டு (2022) ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள். மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.432 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus