தமிழ் சினிமாவை உலகிற்கு எடுத்து காட்டியவர் நம் உலக நாயகன் கமலஹாசன்.இவர் நடித்து , கடந்த 2008 ஆம் ஆண்டு, கே.எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த” தசாவதாரம்” திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தின் கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசனே எழுதியுள்ளார்.
வி. ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் நாகேஷ் ,அசின், மல்லிகாஷெராவத் ,ஜெயப்பிரதா, நெப்போலியன், கே .ஆர். விஜயா, ரமேஷ்கண்ணா, எம்.எஸ் .பாஸ்கர் ,பி .வாசு என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இந்தப் படத்தின் பின்னணி இசையை தேவிஸ்ரீபிரசாத்தும், பாடல்களை ஹிமேஷ் ரேஷம்மியாவும் இசையமைத்திருந்தார்கள்.
இந்தப்படத்தின் கதை 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய 21ம் நூற்றாண்டில் முடியுமாறு அமைக்கப்பட்டிருருந்தது. அறிவியல் விஞ்ஞானி ஆக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கமல், தீவிரவாதிகளிடமிருந்து அறிவியல் சார்ந்த உயிராயுதத்தை பாதுகாப்பதற்காக போராடுவார், இதை சுற்றியே கதை அமைக்கப்பட்டிருக்கும்.
நம் உலக நாயகன் ‘வேட்டையாடு விளையாடு’ படப்பிடிப்பு அமெரிக்காவில் நடிந்துக்கொண்டிருந்தபோது, தசாவதாரம் படத்தின் கதைச்சுருக்கத்தை எழுதினார் என்பது குறிப்பிடதக்கது.
சிவாஜி கணேசனின் “நவராத்ரி” யே தசாவதாரத்தின் ஊக்கம் என்றால் தவறாகது. சோனி பி•எம்•ஜி நிறுவனம் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தது என்பதும் ஒரு முக்கிய நிகழ்வு.
ஆஸ்கார் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட தசாவதாரம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் மக்களின் வரவேற்பை பெற்றது.இந்திய சினிமா வரலாற்றில் 10 வெவ்வேறு கதாப்பாத்திரங்களை ஒரே படத்தில் வழங்கியது தசாவதாரம் என்பது குறிப்பிடதக்கது.மேலும் இப்படம் 200கோடி ரூபாய் வசூலையும் பெற்றுத்தந்தது.
இந்த படம் வெளியிடப்பட்டு இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்றுவரை கமலின் அந்த பத்து அவதாரங்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.