உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “புன்னகை மன்னன்” என்ற திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் ஒருவரான ரேகா தற்போது இந்த படத்தை பற்றி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கமல் நடிப்பில் மறைந்த கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் புன்னகை மன்னன். தன் முதல் காதலி இறந்த பின்பு சோகத்தில் வாடும் ஒரு இளைஞன் மீண்டும் ஒருவரை சந்தித்து காதலித்து வாழ்வில் நன்றாக இருப்பது தான் இந்த படத்தின் கதைக்கரு.
இந்த படத்தில் கமலுக்கு முதல் காதலியாக நடிகை ரேகா நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் தற்கொலை காட்சிக்கு முன்னர் கமல் ரேகாவை உதட்டில் முத்தமிடுவது போன்ற ஒரு காட்சி அமைந்திருக்கும்.
இந்த காட்சிக்கு ரேகாவிடம் யாரும் முறையாக ஒப்புதல் கேட்காமல் திடீரென கமல் முத்தமிட்டாராம். இதுகுறித்து ஏற்கனவே இயக்குனரும் கமலும் பேசி வைத்துக் கொண்டுதான் இதை செய்திருக்கிறார்களாம்.
அந்த காட்சி நன்றாக வருவதற்காக இப்படி செய்ததாக பின்பு கூறினார்களாம். எனினும் என் விருப்பம் இல்லாமல் தான் இதை செய்தார்கள் என்று நான் பல பேட்டிகளில் கூறியிருக்கிறேன், ஆனால் யாரும் என் பக்கக் கதையைக் கேட்க தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ரேகா.
தற்போது நடிகை ரேகா கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்4 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ளே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.