வரிசையாக சம்பவம் செய்ய பிள்ளையார் சுழி போட்ட கமல் !

  • February 10, 2023 / 09:09 PM IST

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ” ஆர் .ஆர்.ஆர் ” படத்தில் ” நாட்டு நாட்டு ” பாடலுக்கு நடனமைத்த பிரேம் ரக்ஷித் நடனமைக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் கமல் அடுத்து இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஒரு படமும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார் . இந்நிலையில் நடிகர் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனத்தில் இயக்குநர்கள் தரணி ,வெற்றிமாறன் , பா.ரஞ்சித் உள்ளிட்டோரை சந்தித்து பேசி உள்ளார் . நடிகர் கமல் விரைவில் இவர்கள் கூடவும் படம் பண்ண அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது . மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus