‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகிய கமல் ஹாசன்… என்ன காரணம் தெரியுமா?

  • February 21, 2022 / 12:30 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனே தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சினேகன், தாமரைச் செல்வி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், வனிதா, தாடி பாலாஜி, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, நிரூப் ஆகிய 14 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி சுஜா வருணி எலிமினேட் செய்யப்பட்டார். நேற்று (பிப்ரவரி 20-ஆம் தேதி) அபிநய் – ஷாரிக் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டார்கள். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “லாக்டவுன் விதிமுறைகளால் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் விளைவாக, ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், ‘விக்ரம்’ படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ மற்றும் ‘விக்ரம்’ இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

ஆகவே, வேறு வழியின்றி கனத்த மனதுடன் பிப்ரவரி 20-ஆம் தேதி எபிசோடுக்கு பிறகு ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் ‘பிக் பாஸ்’ சீசன் 6-யில் உங்களை மீண்டும் சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus