கமலின் பட்டத்தை எடுத்துக் கொண்டாரா அர்ச்சனா?… வெளியானது ‘பிக் பாஸ் 4’ புதிய ப்ரோமோ!

  • October 17, 2020 / 08:18 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார்.

தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் “அர்ச்சனா எல்லோருக்கும் பட்டம்லாம் கொடுத்தீங்க, அதுல எனக்கொரு சின்ன மனக்குறை இருந்ததுங்க, என் பட்டத்தை எடுத்துக்கிட்டீங்க.. ‘மக்களின் பிரதிநிதி’ன்னு சொல்லிருந்தீங்க.. நான் மூணு சீசனா சொல்லிட்டேன் மக்களும் நம்பிட்டாங்க… எல்லோருடைய முகமூடியும் எப்போ கழல போகுது அப்படிங்குற ஆர்வத்துல இருப்பாங்க.. ஆனா, வேட்டி அப்படி இல்ல. அது கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும், என்ன வேல்முருகன்” என்று ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் பேசுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus