விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டிருந்தார். கடந்த மே 2-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளி வந்தது. இதில் கோவை தெற்கு தொகுதியில் கமலை விட 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக-வை சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றார்.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகினார்கள். தற்போது, இது தொடர்பாக நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” என்று பதிவிட்டு ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” pic.twitter.com/RwAa9ykS71
— Kamal Haasan (@ikamalhaasan) May 24, 2021