வெளியானது கமலின் ‘விக்ரம்’ மேக்கிங் வீடியோ… படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • March 14, 2022 / 11:33 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன், காளிதாஸ் ஜெயராம், ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட First Glance படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, படத்தை வருகிற ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus