மம்முட்டியுடன் நடிக்க ஆசைப்பட்ட கமல் !

  • May 30, 2022 / 07:38 PM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் . இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.படத்திலிருந்து வெளியான அனைத்து ப்ரோமோக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது .

இந்நிலையில் விக்ரம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது . ரசிகர்கள் அனைவரும் ஜூன் -3ஆம் படத்தை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் . இந்நிலையில் விக்ரம் படத்தை விளம்பரப்படுத்த நடிகர் கமல் டெல்லி , கொச்சி போன்ற பல ஊர்களுக்கு சென்றுள்ளார் . அந்த வகையில் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

இதில் நான் மோகன்லாலின் ரசிகன் என்று கமல் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் முழுநீள மலையாள திரைப்படத்தில் மீண்டும் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். குறிப்பாக மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இப்போதுள்ள மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் ஆழமாக சிந்திக்கிறார்கள். அவர்களுடன் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus