தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் 232 (எவனென்று நினைத்தாய்) என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்கள். மேலும் இந்த படத்தில் புதிய டெக்னாலஜி ஒன்றை கமல் பயன்படுத்தவுள்ளதாகவும் செய்தி வந்தது.
இதைத்தொடர்ந்து கமல் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை குறைந்த கால அளவில் முடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம். இதற்கு முன்னர் கமல் நடிப்பில் தூங்காவனம் திரைப்படம் 35 முதல் 40 நாட்களுக்குள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் திரைப்படக் குழு குறித்து எந்தவிதமான செய்தியும் வெளியாகாத நிலையில் தற்போது சத்யன் சூரியன் மற்றும் ஃபிலோமின் ராஜ் உள்ளிட்டோர் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தகவல் வந்துள்ளது. விரைவில் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று உறுதியாக தெரிகிறது.