கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 5’… முதல் ப்ரோமோ எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • August 24, 2021 / 11:23 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்போது, சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவை வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus