கமல் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ … இதுவரை யாரும் பார்த்திராத VFX BREAKDOWN வீடியோ!

  • March 4, 2023 / 06:27 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2008-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் ‘தசாவதாரம்’. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அசின் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இதனை இயக்கியிருந்தார்.

இதில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் 10 ரோல்களில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் மல்லிகா ஷெராவத், ஜெய பிரதா, நெப்போலியன், ரகுராம், நாகேஷ், கே.ஆர்.விஜயா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.120 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம். தற்போது, இதுவரை யாரும் பார்த்திராத இந்த படத்தின் VFX BREAKDOWN வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus