விக்ரமுக்கு பிறகு கமல் நடிக்கப்போகும் புதிய படம்… தனுஷ் பட இயக்குநருடன் கூட்டணி!
September 30, 2021 / 10:52 AM IST
|Follow Us
விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, ஜீத்து ஜோசப்பின் ‘பாபநாசம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்கின்றனர்.
‘பிக் பாஸ்’ சீசன் 5 வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், கமல் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்க உள்ளாராம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.