‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துக்காக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • April 26, 2022 / 03:28 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடித்துள்ளனர். படத்தை வருகிற ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

1978-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’. இந்த படத்தில் கமல் – ரஜினி இணைந்து நடித்திருந்தனர். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதர் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ஸ்ரீப்ரியா, ஜெயச்சித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்துக்காக நடிகர் கமல் ஹாசன் ரூ.1.25 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus