கமல் போலீஸாக நடித்து சூப்பர் ஹிட்டான ‘வேட்டையாடு விளையாடு’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • March 23, 2022 / 10:09 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடித்துள்ளனர். படத்தை வருகிற ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

கமலின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். கமல் போலீஸாக நடித்திருந்த இப்படம் உலக அளவில் ரூ.60 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus