கணம் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா ?

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தரும் தயாரிப்பு நிறுவனங்களில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் முதன்மையானது. இவர்கள் தயாரிப்பில் முதலில் வெளியான படம் சகுனி. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .இதனை தொடர்ந்து இவர்கள் தயாரிப்பில் வெளியான படம் ஜோக்கர் .இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது . அதன் பிறகு காஷ்மோரா , அருவி , தீரன் அதிகாரம் ஒன்று , ராட்சசி , கைதி என பல வெற்றிப் படங்களை தயாரித்து உள்ளனர் . அந்த வகையில் தற்போது இவர்களது தயாரிப்பில் வெளியாகி உள்ள படம் கணம் .

கணம் படத்தில் ஷர்வானந்த் நாயகனாக நடித்து உள்ளார் .மேலும் முக்கியமான பாத்திரத்தில் ரீத்து வர்மா நடித்துள்ளார் ,மேலும் நடிகை அமலா மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து உள்ளார் .ஸ்ரீ கார்த்திக் என்பவர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் .ஜேக்ஸ் பீஜாய் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

நடிகர் நாசர் அவர்களும் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .இந்நிலையில் செப்டம்பர் 9 அன்று திரையரங்குகளில் வெளியான கணம் திரைப்படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Share.