தலைவி படம் இந்திய நடிகை-அரசியல்வாதி ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 2021 இந்திய வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத், எம்.ஜி. ராமச்சந்திரனாக அரவிந்த் சுவாமி ஆகியோர் நடித்து இருந்தனர் . மற்றும் R. M. வீரப்பனாக ராஜ் அர்ஜுன் . இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மதன் கார்க்கி (தமிழ்) மற்றும் ரஜத் அரோரா (இந்தி) ஆகியோரால் வசனம் எழுதப்பட்டது. விப்ரி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்து இருந்தனர் .
இப்படத்தில் நாசர், பாக்யஸ்ரீ, ராஜ் அர்ஜுன், மது, தம்பி ராமையா, ஷாம்னா காசிம் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இரண்டு மொழிகளுக்கும் இசை, பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவு G. V. பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார் .
முதலில் இந்தத் திரைப்படம் தமிழில் தலைவி என்றும் இந்தியில் ஜெயா என்றும் பெயரிடப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர்கள் பின்னர் இந்தியிலும் தலைவி என்ற தலைப்பில் வெளியிட திட்டமிட்டனர்.
₹100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது இந்த படம் . இந்த படத்திற்காக நடிகை கங்கனா ரனாத் 28 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .