‘சந்திரமுகி 2’ பட டீமுக்கு குட்-பை சொன்ன கங்கனா ரனாவத்… வைரலாகும் வீடியோ!

  • March 16, 2023 / 08:25 PM IST

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘சந்திரமுகி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படத்தில் ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். ஹாரர் ஜானரில் வெளி வந்த இந்த படத்தின் பார்ட் 2-வையும் இயக்க பி.வாசுவே இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.  இதனை சுபாஷ்கரன் தனது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியாம். எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இதற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, நடிகை கங்கனா ரனாவத் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus