ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது . இந்நிலையில் நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 படத்தில் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . சந்திரமுகி 1-விட சந்திரமுகி 2 நகைச்சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது .
இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . அதாவது சந்திரமுகி 1 படத்தில் ரஜினி சரவணன் என்ற பாத்திரத்தில் நடித்து இருப்பார் சந்திரமுகியை ஏமாற்ற தான் தான் வேட்டையின் என்று கூறுவார் . தற்போது உண்மையான வேட்டையன் பாத்திரத்தில் நடிகர் லாரன்ஸ் நடித்து வருகிறார் . அதேபோல் உண்மையான சந்திரமுகியாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார் .
இந்த படத்தில் நடிக்க கங்கனா ரனாவத் 9 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் .