ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… சூப்பரான அப்டேட் கொடுத்த கங்கனா!

  • December 13, 2020 / 08:53 AM IST

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார். இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது.

தற்போது, இந்த படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகை கங்கனா ரனாவத்தே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி தெரிவித்ததுடன், படத்தின் புதிய ஸ்டில்லையும் ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus