ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம்… வைரலாகும் ‘தலைவி’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

  • December 5, 2020 / 04:06 PM IST

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதா அம்மாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார்

இன்று (டிசம்பர் 5-ஆம் தேதி) ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம். ஆகையால், நடிகை கங்கனா ரனாவத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவி’ படத்தின் புதிய ஸ்டில்ஸை ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடுமாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus