காவிரி விவகாரம்… சித்தார்த்தின் ‘சித்தா’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரச்சனை செய்த கன்னட அமைப்பினர்!
September 29, 2023 / 05:49 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் ‘இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சித்தா’ படம் நேற்று (செப்டம்பர் 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.இதனை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்களுக்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ்.ஏ.பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது, கர்நாடகாவில் இப்படத்தின் புரொமோஷனில் கலந்து கொண்டு சித்தார்த் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கன்னட அமைப்பினர் காவிரி விவகாரம் தொடர்பாக பேசி பிரச்சனை செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சித்தார்த் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.