• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கர்ணன்’ சர்ச்சை… 3-வது முறையாக டைட்டில் கார்டில் செய்யப்பட்ட மாற்றம்?

‘கர்ணன்’ சர்ச்சை… 3-வது முறையாக டைட்டில் கார்டில் செய்யப்பட்ட மாற்றம்?

  • April 20, 2021 / 10:48 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கர்ணன்’ சர்ச்சை… 3-வது முறையாக டைட்டில் கார்டில் செய்யப்பட்ட மாற்றம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வந்தார்.

மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லக்ஷ்மி ப்ரியா, லால், நட்டி, ஜி.எம்.குமார் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில், இப்படம் தொடர்பாக நடிகரும், திமுக-வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் “கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி.எஸ்.தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி” என்று கூறியிருந்தார்.

பின், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி மீண்டும் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் – இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் ’90-களின் இறுதியில்’ என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். தற்போது, ‘கர்ணன்’ படத்தின் டைட்டில் கார்டில் வருடத்தையே குறிப்பிடாமல் “அடிப்படை தேவைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் சாமானிய மக்கள் உயிர்ப்போடு போராடத் தொடங்கிய காலகட்டம். சாட்சியாக – பட்டாம்பூச்சி” என்று மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Karnan Title card has been changed for the 3rd time!

1st time-1997 முன்பகுதியில்
2nd time-90களின் பிற்பகுதியில்.
3rd time:👇🏼👇🏼 pic.twitter.com/VYhxambQ9t

— Jeeva Nandham (@EaswaranTweets) April 19, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dhanush
  • #karnan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Ilaiyaraaja & Dhanush : இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்… இப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

D51 : தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘D51’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்!

D51 : தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘D51’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

D50 : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘D50’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

D50 : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘D50’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version