‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த கார்த்தி… அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

  • February 27, 2023 / 10:39 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘லியோ’வை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கவிருக்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு மெகா ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

2007-யில் ரிலீஸான தமிழ் படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். ஆனால், இயக்குநர் அமீரின் முதல் சாய்ஸாக இருந்தது விஜய் தானாம். பின், சில காரணங்களால் விஜய்யால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags