தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன், காடன், FIR, கட்டா குஸ்தி’ என படங்கள் குவிந்தது.
இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், ஜகஜால கில்லாடி, லால் சலாம், இடம் பொருள் ஏவல், ஆர்யன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2010-யில் ரிலீஸான தமிழ் படம் ‘நான் மகான் அல்ல’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்தார்.
இதில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென சுசீந்திரனின் முதல் சாய்ஸாக இருந்தது விஷ்ணு விஷால் தானாம். பின், சில காரணங்களால் விஷ்ணுவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.