‘விருமன்’ சக்சஸ் பார்ட்டியில் கபடி விளையாடிய கார்த்தி – அதிதி ஷங்கர்… வைரலாகும் வீடியோ!

  • August 17, 2022 / 11:20 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘விருமன்’ படம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான முத்தையா இயக்கியுள்ளார். ஏற்கனவே, இயக்குநர் முத்தையா – கார்த்தி காம்போவில் ரிலீஸான ‘கொம்பன்’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ‘விருமன்’ படத்தை கார்த்தியின் அண்ணனும், முன்னணி ஹீரோவுமான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், கருணாஸ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று (ஆகஸ்ட் 16-ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது நடிகர் கார்த்தியும் – நடிகை அதிதியும் கபடி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus