கார்த்தியுடன் மோத நாள் குறித்த ‘சீயான்’ விக்ரம்!

  • September 21, 2023 / 01:03 PM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள் மற்றும் 2 பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

தற்போது, இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே தேதியில் கார்த்தியின் ‘ஜப்பான்’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus