நேரில் சென்று ஆறுதல் சொன்ன கார்த்தி !

  • January 30, 2023 / 11:46 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ராஷி கண்ணா , ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் நடிகை லைலா முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது .


இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 25 படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது .
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று தலைப்பு வைத்துள்ளனர் . குக்கூ , ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தை இயக்கி வருகிறார் . அனு இம்மானுவேல் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .


இந்நிலையில் நடிகர் கார்த்தியின் ரசிகர் ஒருவர் சமீபத்தில் உயிர் இழந்தார் . அவர் பயிற் வினோத் வயது 29. தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக இருந்துள்ளார் . வினோத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 15 நாட்களுக்கு முன் வினோத் இறந்துள்ளார் . படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்று இருந்த கார்த்தி சென்னை திரும்பியதும் நேரில் சென்றுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus