Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

  • January 27, 2024 / 08:09 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘சர்தார் 2’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். 2022-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

பார்ட் 2-வுக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதியில் இருந்து பூஜையுடன் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus