கார்த்தி – செல்வராகவன் கூட்டணியில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தின் ரிலீஸுக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று முன் தினம் தான் இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். கார்த்தி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமா சென், அழகம் பெருமாள் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இதனை இயக்கியிருந்தார். இப்படம் ரிலீஸானபோது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதன் பிறகு கார்த்தியின் நடிப்பு, செல்வராகவன் இக்கதையில் சொல்லியிருந்த விஷயம் மற்றும் படத்தின் மேக்கிங்கிற்காக பலரும் இன்று வரை பாராட்டி வருகிறார்கள். இந்த படம் உலக அளவில் ரூ.53 கோடி வசூல் செய்ததாம்.

Share.