விஜே லோகேஷை பாராட்டி பதிவு செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ்!
August 13, 2020 / 03:10 PM IST
|Follow Us
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பின்பு வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர்கள் பலபேர். இந்த வரிசையில் விஜே லோகேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்து பின்பு “நானும் ரவுடிதான்” படத்தின் மூலம் பிரபலமானார்.
சில மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட லோகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பெற்று வந்த போது நடிகர் விஜய்சேதுபதி உட்பட பலர் அவர் சிகிச்சைக்கு உதவி செய்தார்கள்.
தற்போது முதல்கட்ட சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள லோகேஷ் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுகிறார். மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ். விஜே பார்வதியுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் சமீபத்தில் “ஜகமே தந்திரம்” படத்திலிருந்து வெளியான “ரகிட ரகிட” என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
இதை வெளியிட்ட விஜே பார்வதி அவரது தன்னம்பிக்கையை பாருங்கள், விரைவில் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் லோகேஷ் வலம் வருவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Wow…. Best thing to happen today… Keep Calm and Come back Stronger Lokesh Sir 🙏👍👏 https://t.co/eIo507UGmX
இந்த வீடியோவை ஷேர் செய்த ஜகமே தந்திரம் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் “இன்றைக்கு நடந்த நல்ல விஷயங்களில் இது ஒன்று. விரைவில் மிகுந்த உடல் நலத்துடன் உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் “இதை வெளியிட்டதற்கு நன்றி லோகேஷ் சார். நீங்கள் மிக அழகாகவும் எனர்ஜியுடனும் இந்த வீடியோவில் காணப்படுகிறார்கள். உங்களுக்கு நல்ல உடல்
நலனை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Thank you dear Lokesh sir for this. You look so beautiful and energetic with your awesome moves. An absolute king! Wishes for great health 🤗 https://t.co/YZ3AThAdFN