விஜய் படத்தை நிராகரித்த கார்த்திக் ! என்ன காரணம் தெரியுமா ?

  • December 5, 2022 / 01:31 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படம் 2023 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்த படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் இரண்டாவது பாடல் வருகின்ற 5 -ஆம் தேதி வெளியாக உள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் அடுத்த நடிக்க உள்ள படம் தளபதி 67 . இந்த படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் . இந்த மாதம் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் திரிஷா , விஷால் , உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான பாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தளபதி 67 படத்தில் நடிகர் கார்த்திக்யை அணுகியுள்ளார் இயக்குனர் லோகேஷ் . கடந்த சில வருடங்களாக கால் வலியால் அவதிப்படும் நடிகர் கார்த்திக் இதை காரணமாக சொல்லி வந்த வாய்ப்பை மறுத்து விட்டார் . இந்த செய்தி நடிகர் கார்த்திக்கின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus