சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் (விக்ரம் 60) என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்து வருகின்றனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வருகிறார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
Karthik Subbaraj’s Vikram 60 Shooting Update1
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. தற்போது, ‘விக்ரம் 60’ படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.