கார்த்தியின் 25-வது படமான ‘ஜப்பான்’… ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • October 25, 2023 / 06:41 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘ஜப்பான்’, ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜப்பான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுனில், விஜய் மில்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கார்த்தியின் கேரியரில் 25-வது படமாம். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

படத்தை வருகிற தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 28-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus